2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

இராணுவ ட்ரக் மோதி ஒருவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 14 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இராணுவ ட்ரக் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை (14) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் - மன்னார் (ஏ -32) வீதியில் பூநகரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பூநகரி 4ஆம் கட்டைச் சேர்ந்த கனகேந்திரன் ரஜின்குமார் (வயது 32) என்பவர் படுகாயமடைந்தார்.

சைக்கிளில் இறங்குதுறைக்குச் சென்றுகொண்டிருந்த இவரை இராணுவ ட்ரக்வண்டி மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .