2021 மே 08, சனிக்கிழமை

’இலக்கத்தகடுகளை அகற்றியமை தொடர்பில் எமக்கு ஒன்றும் தெரியாது’

George   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வலி. வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை, இராணுவத்தினர் அகற்றி அவற்றை கொண்டு சென்றமை தொடர்பில், எமக்கு எதுவும் தெரியாது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பு பார்த்துக்கொள்ளும்” என, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை வடக்கு குரு வீதி என்ற இடத்தில் உள்ள பொதுக் கிணறு சுத்தப்படுத்தப்பட்டபோது அதற்கு இருந்து, 2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தைக்கு விற்பனைக்கு வந்த  மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மீட்கப்பட்டன.

இதுகுறித்து, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவ்விடத்துக்கு  வான் ஒன்றில் வந்த இராணுவத்தினர், அப்பகுதியில் இருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு, மோட்டார் சைக்கிளில் இருந்த இலக்கத் தகடுகளை உடைத்து எடுத்துக்கொண்டு, அந்த இடத்தை விட்டு விரைவாக வெளியேறிச் சென்றுவிட்டனர்.

அதன்பின்னர், பொலிஸார் அவ்விடத்துக்கு வந்ததுடன், மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டு, இலக்கத் தகட்டினை காணவில்லை என தெரிவித்திருந்தனர்.

பின்னர், இலக்கத்தகடு ஒன்று மீட்கப்பட்டதாக கூறப்பட்டதுடன், இலக்கத்தகடு ஒன்றும் காண்பிக்கப்பட்டது. இதில் எந்தளவுக்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது தெரியவில்லை.
இந்த விடயம் தொடர்பாக, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கேட்டபோது, “இதுதொடர்பில், என்னால் பதில் கூற முடியாது. கொழும்பில் உள்ளவர்களே பதில் கூற முடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X