2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

எண்மரில் ஒருவர் புனர்வாழ்வழிக்கப்பட்டவர்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான ஐயன் என்றழைக்கப்படும் சூரியகாந்தி ஜெயசந்திரன், ஏற்கெனவே புனர்வாளிக்கப்பட்டு விடுதலைச் செய்யப்பட்டவரென தெரியவந்துள்ளது.

இது குறித்து, சூரியகாந்தி ஜெயசந்திரனின் தாயார் கருத்துத் தெரிவிக்கையில்,

தனது மகன், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதியன்று புனர்வாழ்வழிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இராணுவத்தினர் அடிக்கடி தங்களுடைய வீட்டுக்கு வந்து மகனிடம் விசாரணை செய்ததாகத் தெரிவித்த அவர், பின்னர், 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதியன்று தனது மகனை காரணமின்றி ​கைதுசெய்யததாகவும் கூறினார்.

அன்றைய தினம் தனது மகனுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே, மகன் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தனது மகள், பூசாம், கொழும்பிலுள்ள 4ஆம் மாடி ஆகியவற்றுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், தானும் பலமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தனது மகனுக்கு எதிராக 2 வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் ஒன்றில் இருந்து தனது மகன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றைய வழக்கு கிடப்பில் போடப்படப்பட்டு இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர் கவலை வௌியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--