2021 மே 06, வியாழக்கிழமை

எதிர்க்கட்சி தலைவருக்கு சி.வி.கே. கடிதம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கரு ஜெயசூரிய ஆகியோருடன் கலந்துரையாடித் தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை, திங்கட்கிழமை கையளித்துள்ளார்.

வடமாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள 401 அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான பதவிகளுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கு வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அல்லது மத்திய நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வடமாகாண சபை மேலதிகமாக உருவாக்கியுள்ள 851 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அங்கிகாரத்தை முகாமைத்துவ சேவைகள் திணைக்கள வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .