2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

எல்லை தாண்டுவதை நிறுத்தினால் பிரச்சினை முடிந்துவிடும்: எமிலியாம்பிள்ளை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவது  பிரச்சினையாகவே உள்ளது. அவர்கள் எல்லை தாண்டுவதை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்தினால் பிரச்சினை முடிந்துவிடும். அதனைவிடுத்து அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு இருப்பது காலத்தை இழுத்தடிக்கும் செயல் ஆகும் என்று யாழ். மாவட்ட கடற்றொழில் சங்க  சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்;.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதை உடனடியாத்க தீர்க்க முடியும். அதனை விடுத்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் எவ்வித பயனும் நம்பிக்கையும் இல்லை. அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தையென காலத்தை இழுத்தடிக்க வேண்டாம். பேச்சுவார்த்தைகளில் இனிமேல் நாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட போது, நான் எவ்வித விட்டுக்கொடுப்புக்களையும் வழங்காமல் எமது நிலையிலிருந்து இறங்கி வராமையால் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு என்னை அழைக்கவில்லை.

இந்திய மீனவர்களும், தென்னிலங்கை மீனவர்களும் எமது எல்லைக்கு அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கின்றனர்.

தென்னிலங்கை மீனவர்களை எமது பிரதேசத்துக்குள் அத்துமீறி மீன்பிடிக்காதீர்கள் என கூறினால், 'முதலில் நீங்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்' என்று அவர்கள் எமக்குக் கூறுகின்றனர். இந்திய மீனவர்களின் அத்தமீறலை தடுத்தால் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியும் என்று எமிலியாம்பிள்ளை மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .