2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஏழாலையில் கைக்குண்டு மீட்பு

George   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் உள்ள தோட்ட வளவினுள் இருந்து, கைக்குண்டு ஒன்று, இன்று திங்கட்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

வளவினை துப்புரவு செய்த உரிமையாளர், கைக்குண்டு இருப்பதனை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .