Princiya Dixci / 2016 ஜூலை 12 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
முல்லைத்தீவுக் கடலில் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்களுடன் இணைந்து ஒற்றுமையாக கரை வலைப்பாடுகளை மேற்கொண்டிருந்த பெரும்பான்மையின சந்ததியினர், அதன் பின்னர் பெரும்பான்மைப் பகுதியில் வசித்து இனத்துவேசம் கொண்டவர்களாக மாறியுள்ளனர் என வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரன ஜெயநாதன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற போது, கரைவலைப்பாடுகள் தொடர்பில் கதைக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கூறுகையில்,
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவுப் பகுதியில் ஜனமய மற்றும் பெணான்டோ என்ற இரண்டு கரைவலைப்பாடு முதலாளிகளின் கீழ், சிங்கள மீனவர்கள் தமிழ் மீனவர்களுடன் ஒற்றுமையாக தொழில் செய்தனர். அந்த முதலாளிகள் தமிழ் மக்களுக்கும், ஆலயங்களுக்கும் உதவிகளைச் செய்தனர்.
அதன் பின்னர் யுத்தம் காரணமாக அவர்களது சந்ததியினர் சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று வாழ்ந்தனர். இதனால் அவர்கள் இனத்துவேசம் கொண்டவர்களாக மாறி தற்போது முல்லைத்தீவுக்கு வந்துள்ளனர். இலங்கை அரசாங்கம் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கரைவலைப்பாடுகளை சிங்கள மக்களுக்கு பெயர் மாற்றிக் கொடுத்து இந்தப் பிரச்சினையை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இங்குள்ள அதிகாரிகளுக்கு முதுகெலும்பு இல்லை. வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியும் எந்தப் பயனும் இல்லை. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
48 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025