S.Renuka / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணமான பலுசிஸ்தான் மக்கள் தங்களுக்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர்.
மேலும், பலுச் விடுதலைப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சனிக்கிழமை (31) அன்று பலுசிஸ்தானில், பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, இராணுவ வீரர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது.
இந்த மோதலில் 15 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள், 92 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இதே போல், வெள்ளிக்கிழமை (30) அன்று பலுசிஸ்தானில் உள்ள பஞ்ஜ்குர் மற்றும் ஹர்னாய் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம், பலுசிஸ்தானில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
பலுசிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்கு கடந்த ஆண்டு 956 பேர் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட சுமார் 22 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
40 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago