2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு காய்ச்சியதை காட்டிக்கொடுத்த பெண் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான் 

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் அயல்வீட்டில் கசிப்பு காய்ச்சியதை பொலிஸாருக்கு காட்டிக்கொடுத்த பெண்ணை, அயல்வீட்டுக்காரர்கள் வீடு புகுந்து ஞாயிற்றுக்கிழமை (04) தாக்கியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த பரமசிவம் சரோஜா (வயது 47) என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

கசிப்பு காய்ச்சியதை பொலிஸாருக்கு தானே காட்டிக்கொடுத்த காட்டிக்கொடுத்தாக குறித்த பெண், அயல்வீட்டுக்காரர்களுக்கு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அயல் வீட்டுக்காரர்கள் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X