2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவர் கைதாகினர்

எம். றொசாந்த்   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழில். கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

கோப்பாய் பகுதியில், வீதி சோதனை நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டு இருந்த பொலிஸார் குறித்த இருவரையும் மறித்து சோதனையிட்டபோது இருவரின் உடமையில் இருந்து சிறியளவிலான கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். 

இருவரும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தென்மராட்சி பகுதியில் இருந்து வட்டுக்கோட்டையில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையே கோப்பாய் சந்திக்கு அருகில் மறித்து சோதனையிட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் கோப்பாய் பொலிஸார் இன்று முற்படுத்தினர்.

குறித்த வழக்கை விசாரித்த நீதவான் இருவரையும் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--