Editorial / 2019 நவம்பர் 11 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெடுந்தீவு கோப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள், கடந்த 6ஆம், 7ஆம் திகதிகளில், மக்களிடம் கையளிக்கப்பட்டது என, தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
குறித்த அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான 10,000 வீட்டுத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 2,945 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிர்மாணப்பணிகள், முடிவுறும் தருவாயில் உள்ளனவென்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், உடுவில் பிரதேச செயலகப்பிரிவில், காணிகள் அற்ற நிலையில் இடம்பெயர்ந்த 53 குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகள், ஒரு மாதிரிக் கிராமமாக அபிவிருத்திச் செய்யப்பட்டு, உட்கட்டமைப்பு வசதிகளுடன் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், வட்டுக்கோட்டையில் புதிய தபால் அலுவலகத்தை அமைக்கவும், மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில், பொது நோக்கு மண்டபத்தை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பக்கப்பட்டுள்ளது என்றும் சிறுதொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டு, மக்கள் மயப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
4 minute ago
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
2 hours ago
2 hours ago