Sudharshini / 2016 ஜூலை 20 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடித்த 15 மீனவர்களுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் இன்று புதன்கிழமை (20) தீர்ப்பளித்தார்.
அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடித்த பாசையூர் மற்றும் குருநகர் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை செவ்வாய்க்கிழமை (19) புங்குடுதீவு கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 104 கடலட்டைகள், சுழியோடுவதற்கு பயன்படுத்தப்படும் முகமூடிகள், சப்பாத்துக்கள் மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட 15 மீனவர்களும்; யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதிகாரிகள், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்தினர். இதன்போதே மீனவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் 104 கடலட்டைகளையும் அழிக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025