2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழில் மாபெரும் போராட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில், எதிர்வரும் 30ஆம் திகதியன்று, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடக்கில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அவர்களின் உறவினர்கள், ஒரு வருடத்தைக் கடந்தும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் எதிர்வரும் 30ஆம் திகதியன்று காலை 9.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைத்து தரப்பினரையும் கலந்துகொண்டு, ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .