2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கந்தரோடையில் கும்பலொன்று வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு வாள்களுடன் வீடொன்றுக்குள் நுழைந்த இளைஞர் குழுவொன்று வீட்டிலிருந்த மாணவனைத் தாக்கியுள்ளதுடன், வீட்டு வேலிகளையும் வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

இது தொடர்பில் 119 அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு அயல் வீட்டுக்காரர்களுடனான பகையே இதற்குக் காரணம் எனக் கண்டறிந்தனர். 

இதனையடுத்து, இரு தரப்பினரையும் சமாதானமாகச் செல்லுமாறு கோரினர்.

பாதிக்கப்பட்டவர்கள் சமாதானமாகச் செல்ல விருப்பம் இல்லாமையினால் இது தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்க வேண்டும் எனக்கோரியபோதும் அதனைப் பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .