2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

காய்ச்சலால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 23 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்

மூன்று நாள்கள் தொடர்ச்சியாக காய்ந்த காய்ச்சல் காரணமாக சோர்வுற்று இருந்த குடும்பஸ்தர் கதிரையில், வியாழக்கிழமை (21) மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு, உயிரிழந்தவர் நாவற்துறை தெற்கு  பகுதியினை சேர்ந்த நாகரத்தினம் ராஜேந்திரன் வயது (43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18ஆம் திகதி மேற்படி நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 21ஆம் திகதி இரவு வீட்டில் கதிரையில் இருந்தவர், திடிரென மயங்கி வீழ்ந்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தனர்.

எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் கூறியுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .