2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

‘கிருமி நீக்கல் செயற்றிட்டத்துக்கு ஆதரவு வழங்கவும்’

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயற்றிட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டுமென, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

தொடர்ந்துரைத்த அவர், பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு இதனை உரியமுறையில் நடைமுறைபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

சுகாதார திணைக்களமும் இந்த நடவடிக்கைக்கென விசேடமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களும், இதனை உரிய முறையில் பொறுப்போடு செயற்படுத்துமாறும், அவர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வருகைதருபவர்கள் தொடர்பிலும் கண்காணித்து உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும், ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .