2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

குடத்தனையில் பெண் வெட்டிக் கொலை

Gavitha   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில்,  பெண் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியிலுள்ள தனது வீட்டுடன் இணைந்த வியாபார நிலையமொன்றை நடத்தி வரும் தங்கவேலாயுதம் பரமேஸ்வரி (வயது 65) என்ற பெண்ணே, இவ்வாறு கொலைச் செய்யப்பட்டள்ளார்.

குறித்த பெண், தனது கணவருடன் தனிமையில் வசித்து வருவதாகவும் அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

இவர் கொலைச் செய்யப்பட்டமைக்காக காரணம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .