2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கோட்ட, உதவி கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Gavitha   / 2016 மார்ச் 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால், கோட்டக்கல்வி, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நல்லூர், கோப்பாய், வெலிஓயா ஆகிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை - 3 இலங்கை கல்வி நிர்வாக சேவை - 2 (பொது) ஆளணியைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்தும் அதிபர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வலிகாமம் வலய முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர், மன்னார் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகத்தர் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையை சேர்ந்தவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர், வலயக்கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று வலயக் கல்விப்பணிப்பாளரின் சிபார்சுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், கல்வி அமைச்சு, வடமாகாணம், செம்மணி வீதி நல்லூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும் என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X