2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கேலிக்கூத்தாகி வரும் உண்ணாவிரதம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் என்பவை தற்போது பகிடியாகவும் கேலிக்கூத்தாகவும் மாறிவருவதாக பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேப்பாப்புலவில் பெரிய காணிகளைப் பிடித்துள்ள விமானப்படை, பாரிய இராணுவ முகாமை நிலையாக அமைத்துள்ளது. இனி அவர்களை வெளியேற்ற முடியும் என்று தோன்றவில்லை. முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

வவுனியாவில் இராணுவக் குடியிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். கட்;டத் தொடங்கும் போது, நாங்கள் எல்லோரும் எங்கு சென்றோம்?. உண்ணாவிரதங்கள் அரசியலாக்கப்பட்டு ஏமாற்று வேலை செய்யப்படுகின்றது.

வலிகாமம் வடக்கு, சம்பூர் காண விடுவிப்பு பற்றி மாத்திரம் கதைக்கின்றனர். ஏன் மிகுதி இடங்களில் காணிகளை இராணுவத்தினர் அபகரிக்கவில்லையா?. அதனைக் கதைப்பதற்கு ஆள் இல்லை.

ஒரு சாதாரண குடிமகன் வயல் காணியை மண் போட்டு, நிரப்பி குடிசை கட்டினால் பிடித்துச் செல்கின்றார்கள். ஆனால், இராணுவத்தினர் இவ்வளவு பரப்பளவுள்ள வயல் காணியை மண் போட்டு நிரப்பி முகாம் கட்டும் போது, அதிகாரிகள் எங்கு சென்றனர்? இராணுவத்துக்கு மாத்திரம் அனுமதியா?

இது தொடர்பில் அரசாங்கத்துடன் கதைத்து நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன்வரவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .