Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஜூலை 10 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
'வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்காக கொடுக்கப்பட்ட மாடுகள் கடத்தப்பட்டு, இறைச்சியாக்கப்படும் செயற்பாட்டை நிறுத்துவதற்கு பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வேலணை பிரதேசச் செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் சனிக்கிழமை (09) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில்; வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு எம்மால் வழங்கப்படும் கால்நடைகளையும் கடத்தல் காரர்கள் விட்டு வைப்பதில்லை. அவற்றை களவாடுவது மாத்திரமன்றி இறைச்சியாக்கி விற்பனை செய்கின்றனர்.
அது மாத்திரமன்றி, மாலை நேரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. அவ்வாறு மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் ரக வாகனமொன்றை பொலிஸார் கைப்பற்றிய போதும், அந்த வாகம் சட்ட நடவடிக்கையின் பிரகாரம் விடுவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட வாகனம் மீடும் அதே மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றது' என்று அவர் கூறினார்.
'வேலணை பிரதேச செயலாளர் பிரிவானது 4 தீவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் முக்கிய பகுதியான புங்குடுதீவு பகுதியில் பொலிஸ் நிலையமொன்று இல்லை. அங்குள்ள வீடொன்றில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக புனரமைத்துள்ளோம். அங்கு பணியாற்றுவதற்கு பொலிஸார் முன்வரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago