2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

சுகவாழ்வு சதுக்கமாக தெல்லிப்பழை பிரகடனம்

George   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உலக புகைத்தல் எதிர்ப்புத் தினத்தையொட்டி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம், சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து மது, புகைத்தல், பொலித்தீன், மற்றும் விவசாய இராசயனங்கள் ஆகியவையை கட்டுப்படுத்தப்பட்ட சதுக்கமாக, தெல்லிப்பழை சந்தியிலிருந்து புற்றுநோய் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதி, நேற்று முன்தினம் பிரகடனப்பட்டது.

இந்நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர், புற்றுநோய் வைத்திய நிபுணர்கள், பிரதேச சபை செயலாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .