Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 மே 26 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
"வடமாகாணத்தில், பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவற்றால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் வளரும்" என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 93ஆவது அமர்வு, நேற்று (25) நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் விகாரை உரிய அனுமதிகள் பெறப்படாமல் கட்டப்படுவதாக அறிந்துள்ளேன். இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை உள்ளூராட்சி அமைச்சர் எனும் வகையில் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என விசேட கவனயீர்ப்பு ஒன்றினை சபையில் முன் வைத்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், நாவற்குழி விகாரை உரிய அனுமதி பெறப்பட்டா கட்டப்படுகின்றது என்பது தொடரில் நிச்சயம் ஆராய்வோம். இதே போன்றே முல்லைத்தீவில் கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைக்கப்படுகிறது.
அத்வேளை இன்றைய தினம் (நேற்று) தென்னிலங்கையில் இருந்து 300 பௌத்த பிக்குகள் நாவற்குழிக்கு வந்து பௌத்த சமய வழிப்பாட்டில் ஈடுபட உள்ளதாகவும் , எனக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிந்து கொண்டேன். என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவைத்தலைவர் , நாவற்குழி பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமம். அங்கே புதிய சிங்கள கிராமம் ஒன்று தற்போது உருவாகி வருகின்றது. அது எமக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றது. என தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago