Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
கி.பகவான் / 2017 ஜூலை 21 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஆலயங்களில் சமையல் வேலையில் ஈடுபடுவோர், மருத்துவ சான்றிதழை பெற்றிருப்பது அவசியம்;' என சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
ஆலயங்களில் சமையல் வேலைகளில் ஈடுபடுவோர் காய்ச்சல் உட்பட வேறு நோய் தாக்கங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை உண்ணும் பலர் வயிற்றோட்டம் மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு இலக்காகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதை காணக்கூடியதாக உள்ளது.
இவர்கள் அனைவரும் ஆலயங்களில் இடம்பெற்ற அன்னதானத்தில் உணவருந்தியவர்களென அறியப்பட்டுள்ளது. இதனால், ஆலய அன்னதானத்துக்காக சமையல் வேலையில் ஈடுபடுவோர் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியமாகிறது.
மருத்துவச் சான்றிதழ் இன்றி, சமையல் வேலையில் ஈடுபடுவோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago