2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

சரவணபவன் எம்.பி வீட்டில் கொள்ளை

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், என்.ராஜ்

யாழ்ப்பாணம் - கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் வீட்டில், பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர், மடக்கிப் பிடிக்கப்பட்டு, கோப்பாய் பொலிஸாரிடம், ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

 இச்சம்பவம், நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டுக்குப் பின்புறமாக உள்ள மதில் வழியே வளவுக்குள் சென்ற மூவர், வீட்டின் பின்புறமிருந்த பழைய இரும்புகளைத் திருடி, ஓட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். 

இதை அவதானித்த ஈஸ்வரபாதம் சரவணபவனின் வீட்டில் பொறுப்பாகவிருந்தவர், குறித்த ஓட்டோவைத் துரத்திச் சென்று, ஓட்டோவில் பயணித்த மூவரையும் மடக்கிப் பிடித்தார். 

இச்சம்பவம் குறித்து, கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த மூவரையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், திருநெல்வேலி - பாற்பண்ணை வீதியைச் சேர்ந்தவர்களென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், கைப்பற்றப்பட்ட பழைய இரும்புகள் தன்னுடையவை என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .