2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சிகிச்சை பலனின்றி மனைவியும் உயிரிழப்பு

Gavitha   / 2016 ஜூலை 17 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கணவனால் தீவைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (16) மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயராஜா தர்சினி (வயது 24) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் வசிக்கும் இவ்விருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். எனினும் அண்மை நாட்களாக இருவருக்கு இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட, குறித்த  பெண் தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அங்கும் சென்று முரண்பட்ட கணவன், மனைவியை மாமரத்தில் தூக்கு போடுவதற்கு முயற்சி செய்துள்ளார். அது பயனளிக்காமல் போக, கடந்த 7ஆம் திகதி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிவிட்டு, தனக்கும் தீ மூட்டிக்கொண்டுள்ளார். தீக்காயங்களுக்குள்ளான கணவனும், மனைவியும் முதலில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவரது கணவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்த நிலையில் இவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .