2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுயவிருப்பத்தில் மாணவர்கள் ஆடைகளை அணியலாம்

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மாணவர்கள் தமது சுய விருப்பத்தின் பிரகாரம் ஆடைகளைத் தெரிவு செய்வதற்கும் அணிவதற்கும் உரிமை உண்டு. அதைத் தடுக்கின்ற உரிமை எவருக்கும் இல்லை. ஆனாலும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சூழல் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆடைகள் அணிதல் வரவேற்கத்தக்கது' என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஒன்றியம் புதன்கிழமை (23) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது, இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு நிகராக அமைதியாக செயற்பட்டு உயர்கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பை ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது. இவ்விடயம் எல்லோரும் அறிந்ததே.

இந்நிலையில் அண்மைக் காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உண்மைக்கு மாறான குறிப்பிட்ட ஆடைகளை அணியலாம் என ஒரு கருத்து சமூகத்தில் பல்வேறு மட்டங்களிலும் நிலவி வருவதுடன் சர்வதேச ரீதியாகவும் அக்கறையுள்ளவர்களால் பேசப்பட்டு வருகின்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூவின மாணவர்களும்  கற்கிறார்கள். அவர்களது ஆடைக் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற இனம் மதம், சூழல், நண்பர்கள், வாழ்ந்த பிரதேசம், மனோநிலை ஆகியன ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனாலும் வாழ்கின்ற சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களது ஆடைத்தெரிவு, அணியும் முறை அமைந்திருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

இவ்வாடைக் கட்டுப்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் எவரும் கதைப்பார்களாயின் எமது பல்கலைக்கழகத்தின் சுமூக செயற்பாடுகளை குழப்புகின்ற செயலாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கருதும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .