2021 மே 08, சனிக்கிழமை

சேயாவின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

கம்பஹா, கொட்டதெனியா சிறுமி சேயாவின் படுகொலைக்கு நீதி கோரியும் பெண்கள் சிறுவர்கள் மீதான வன்முறையை கண்டித்தும்   யாழில் மத்திய பஸ் நிலையத்தில், சனிக்கிழமை (03) கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக மாக்சிஸ லெனினிசக் கட்சி ஆகியனவும் கலந்து கொண்டு,  போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்.

'நேற்று வித்தியா, இன்று சேயா, நாளை?' 'படுகொலை செய்யப்பட்ட சேயாவுக்கு நீதி வழங்கு', 'சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையைத் தடுக்க, இன, மத பேதமின்றி ஒன்றுபடுவோம்', 'சிறுவர் குறித்த சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்', 'பாலியல் குற்றங்களுக்கு தனி நீதிமன்றத்தை அமைத்து விசாரணை செய்,' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X