2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சிறுவன் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2016 மார்ச் 14 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி ஐயனார் கோவில் பகுதியில் மரக்காலையொன்றில் பணியாற்றும் சிறுவன் மீது இனந்தெரியாத கும்பலொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு தாக்குதல் மேற்கொண்டதில் சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அதேயிடத்தைச் சேர்ந்த கே.கேமராஜன் (வயது 17) என்ற சிறுவனே படுகாயமடைந்துள்ளான்.

மரக்காலைக்குள் பொல்லுகள் மற்றும் கைக்கிளிப்புக்களுடன் சென்ற 15 பேர் கொண்ட கும்பலொன்று, சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது. 

தொடர்ந்து மரக்காலை உரிமையாளரையும் தாக்கியது. அவர்கள் இருவரும் அவலக்குரல் எழுப்பியதையடுத்து, அங்கு பொதுமக்கள் கூடினர். 

இதன்போது, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளொன்றையும் கைவிட்டு தாக்குதல் நடத்திய கும்பல் தப்பிச் சென்றனர். 

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .