2021 மார்ச் 03, புதன்கிழமை

சிவில் பாதுகாப்பு குறித்து விசேட கலந்துரையாடல்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 42 கிராம அலுவலகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த கிராம அலுவலகர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எம்.விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு மன்னார் நகரசபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (25) மாலை
இடம்பெற்றது.

இதன் போது கிராம அலுவலகர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்;தர்கள், கிராம முக்கியஸ்தர்கள், மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீரீஸ், மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜெயசிங்க, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம் பெறும் குற்றச் செயல்கள்,சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு குறித்த சட்ட விரோத செயற்பாடுகள் மற்றும் குற்றச் செயல்களை தடுப்பது பற்றியும் ஆராயப்பட்டது.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட பகுதிகளில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து வருகை தந்தவர்களினால் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபில்யூ.எம்.எம்.விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதன்போது மக்களின் பாதுகாப்புக்களை கருத்திற் கொண்டு இரவு நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து இனம் தெரியாதவர்களின் நடமாட்டங்களை குறைப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இவ்விடயங்களில் கிராம அலுவலகர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்;தர்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .