Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 18 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான வயோதிப் பெண்ணொருவர், யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில், 9ஆவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது தாயார் மகாலிங்கம் தவநிதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களின் உறவினர்கள் தன்னை மிரட்டுவதாக, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
மாணவியின் தாயாரின் முறைப்பாட்டுக்கு இணங்க நடவடிக்கை எடுத்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், சுவிஸ்குமாரின் தாயாரையும் அவரின் மற்றுமொரு உறவினரையும் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தனர்.
சுவிஸ்குமாரின் தாயார், சிறையில் இருக்கும் போது, உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (17) உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago