2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

’தமிழர் அரசியலுக்கு ஹெலிகொப்டர் இறக்குமதிகள் தேவையில்லை’

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைத் தாக்குவது தவறெனத் தெரிவித்த வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழர் அரசியலுக்கு ஹெலிகொப்டர் இறக்குமதிகள் தேவையில்லையென்றும் அது இன்னும் பல விக்னேஸ்வரன்களையே உருவாக்குமென்றும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, வடக்கு மாகாண ஆளுநரிடம் வழங்குவதற்குத் தயாரித்தவர்கள், துணிச்சல் இல்லாமல் பயந்த நிலையில், தன்னைப் பலிக்கடா ஆக்கினரெனவும் குற்றஞ்சாட்டினர்.

தாங்கள் ஒப்புக்கொடுக்க வேண்டிய மற்றும் பதில் வழங்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அரசியல் என்பது, அதற்கான அனுபவம் வேண்டுமெனத் தெரிவித்த அவர், இன்றைக்கு ஏன் சம்பந்தன் ஐயாவைப் பின்பற்றுகின்றோமென்றால், அதற்கு அவரிடமிருக்கின்ற ஆற்றல், அறிவு, அனுபவம் ஏற்புடைமையே ஆகுமெனவும் கூறினார்.

விக்னேஸ்வரன் நல்ல மனிதரெனத் தெரிவித்த அவர், அவரை ஓர் ஆன்மீகவாதியாகப் பார்க்கிறேனெனவும் கூறினார்.

அரசியல் அணுகுமுறை அவரிடம் இருக்காததாலேயே, அவரது தோல்விக்குக் காரணமெனத் தெரிவித்த அவர், அதேபோல், நிர்வாக அனுபவமும் அவரிடம் இருக்கவில்லையென்றார்.

சுமந்திரனைத் சிலர் தாக்குகின்றார்களெனவும் அது தவறெனவும் தெரிவித்த சிவஞானம், சுமந்திரன் செய்யக கூடியவற்றை செய்திருக்கிறாரெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X