2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஜூலை 16 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுன்னாகம் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவர் இன்று(16) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து வந்த மின்சார சபையின் புலணாய்வு அதிகாரிகளும் சுண்னாகம் பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை மயிலினி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மின்மானியின் வயரினை சேதப்படுத்தி மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற ஒருவர்  நேற்று(15) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .