2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

திருட்டு சந்தேகநபருக்கு ஒருவருட கடூழியசிறை

Princiya Dixci   / 2016 மே 26 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்த ஏழாலை பகுதியைச் சேர்ந்த நபருக்கு, 1 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, மல்லாகம் மாவட்ட நீதிமன்ற முன்னாள் நீதிவானும் தற்போதைய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று புதன்கிழமை (25) தீர்ப்பளித்தார்.

அத்துடன், முதலாவது திருட்டு குற்றச்சாட்டுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். இரண்டாவது குற்றமான திருட்டுப் பொருளினை தன் உடமையில் வைத்திருந்தமைக்கு 1,500 ரூபாய் அபராதமும் 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட கடூழியசிறைத்தண்டனையும் விதித்தார்.

கடந்த ஒருவருட காலமாக குறித்த வழக்கினை விசாரணை செய்த முன்னாள் நீதிவான் சின்னத்துரை சதீஸ்ரன், தீர்ப்பு வழங்குவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இருந்து மல்லாகம் நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவான நிலையில் காணப்பட்டதைக் கருத்தில் கொண்ட நீதிவான் கொள்ளையடித்த குற்றச்சாட்டுக்கு 1 வருட கடுழியசிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .