2021 மார்ச் 03, புதன்கிழமை

திருடு போன இயந்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்க

Gavitha   / 2016 மே 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மயிலங்காடு, குப்பிளான், சுன்னாகம் மற்றும் சபாபதிபிள்ளை போன்ற முகாம்களில், கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, மீட்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்களை, உரிய அடையாளங்களை காண்பித்து உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கையின் போது, இந்த நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 7 நீர் இறைக்கும் இயந்திரங்கள் மல்லாகம் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றின் உரிமையாளர்கள், அல்லது நீர் இறைக்கும் இயந்திரம் திருட்டுபோனதாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தவர்கள் உரிய அடையாளம் காட்டி, இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .