Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 21 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் நிலப்பரப்பில் 486.5 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 700 குடும்பங்கள் மீளக்குடியமர விரும்பம் தெரிவித்து, தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அனேகமானவை மக்களின் விவசாயக் காணிகளே. இவற்றில் நிரந்தர வீடுகளை கொண்டிருந்தவர்களும் விவசாய காணியில் தற்காலிக குடிசை அமைத்து குடியமர விருப்பம் தெரிவித்தவர்களுமாக 700 குடும்பங்கள் இவ் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளன.
இதன் அடிப்படையில் ஜே-235 காங்கேசன்துறை தெற்கு, ஜே-236 பளை வீமான்காமம் வடக்கு, ஜே-250 தையிட்டிதெற்கு, ஜே-245 மயிலிட்டி வடக்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-253 பலாலி கிழக்கு, ஜே-254 பலாலி வடக்கு ஆகிய ஏழு கிராம சேவையாளர் பிரிவில் இம் மீள்குடியேற்றத்துக்கு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமது காணிகளை அடையாளப்படுத்தி பதிவை மேற்கொண்ட 700 பேருக்குமான முதற்கட்ட கொடுப்பனவான 13 ஆயிரம் ரூபாய் எதிர்வரும் நாட்களில் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 பரப்பு காணியை துப்பரவு செய்வதற்கு கூலியாக 1,781 ரூபாய் 25 சதம் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago