Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
தனது குடும்பத்தினர் சகிதம், கோவிலுக்குச் சென்ற மல்லாகம் நீதிமன்ற நீதவானின் அலைபேசி திருடப்பட்ட சம்பவமொன்று, நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் நேற்று (09) இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், இளைஞன் ஒருவர், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழா, நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போது, அன்றைய தினம் மாலை மல்லாகம் நீதவான் தனது குடும்பத்தினர் சகிதம் நல்லூர்க் கந்தசுவாமிக் கோவிலுக்கு, காரில் சென்றுள்ளார்.
இதன்போது, நீதவான், தனது அலைபேசியை காருக்குள் வைத்துவிட்டு கோவிலுக்குச் சென்றுள்ளார். பூசை வழிபாட்டை நிறைவு செய்து விட்டு வந்த போது, காரில் இருந்த தனது அலைபேசி திருடப்பட்டுள்ளதை உணர்ந்த நீதவான், அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், நல்லூர்க் கோவில் வளாகத்தில் நின்ற இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.
நீதவானின் மெய்ப் பாதுகாவலர் கார் கண்ணாடியை ஒழுங்காக மூடாததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குறித்த இளைஞன், காருக்குள் இருந்த நீதவானின் அலைபேசியைத் திருடியுள்ளதாக, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
25 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago