2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நல்லூரில் அரசியல் கருத்தாய்வரங்கு

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், “புதிய ஜனாதிபதி! புதிய சூழல்! தமிழ்மக்கள்?” எனும் தலைப்பிலான கருத்தாய்வரங்கு, ஞாயிற்றுக்கிழமை (24) காலை 09.30 மணிக்கு, நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் பவன் விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளது.

அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் என். இன்பம் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி அரசியல் கருத்தாய்வரங்கில், அரசியல்,சமூக ஆய்வாளர் எம். நிலாந்தன் கலந்து கொண்டு கருத்துரையாற்றவுள்ளார்.

குறித்த கருத்தாய்வரங்கில், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியுமென, அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X