2021 மே 15, சனிக்கிழமை

'நீதிபதி சொன்னதால் முகத்திலேயே குத்தினேன்'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் பகுதியில், பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை, அப்பெண்ணின் சகோதரன், முகத்திலேயே குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதனாலேயே, தொந்தரவு கொடுத்தவரின் முகத்திலேயே தான் குத்தியதாகவும் அந்நபர் தெரிவித்துள்ளார். 3 சகோதரிகளுக்குத் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு முகத்திலேயே குத்துங்கள் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறியதற்;கமைய, தான் இவ்வாறு செய்ததாகவும் அப்பெண்ணின் சகோதரன், சுன்னாகம் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .