2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

நீதிமன்ற கட்டளைகள் பெறப்பட்ட பின்னரே வேள்வி தொடர்;பாக அறிவிக்கப்படும்

Niroshini   / 2016 மே 29 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

கருகம்பனை, கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த வேள்விப் பொங்கல் விழா தொடர்;பாக, நீதிமன்றங்களில் கட்டளைகள் பெறப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று ஆலய தர்மகத்தா சி.புஸ்பராசா அறிவித்துள்ளார்.

இந்த ஆலயத்தின் வருடாந்த வேள்விப் பொங்கல் விழா சனிக்கிழமை (28) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், யாழ். மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு காரணமாக வலி. வடக்கு பிரதேச சபையினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்;பாக நீதிமன்றங்களில் தகுந்த கட்டளைகளை பெறும்பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தகுந்த கட்டளைகள் பெறப்பட்ட பின்னர், வேள்விப் பொங்கல் தொடர்பாக அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .