Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
கரவெட்டி மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த நால்வரைக் கடித்த நாய், உயிரிழந்துள்ளதாகவும் அதனுடைய தலையை பரிசோதனைக்காக கொழும்பு மிருக ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்;பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேற்படி பகுதியைச் சேர்ந்த நால்வரைக் கடித்த நாய், அதன் பின்னர் உயிரிழந்துள்ளது. இது தொடர்பில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மிருக வைத்தியர், சுகாதார வைத்தியதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
கடியுண்டவர்கள் இனங்காணப்பட்டு, அவர்கள் உரிய முறையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, நாயின் தலை வெட்டப்பட்டு, யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள மிருக ஆராய்ச்சி நிலைத்தினூடாக கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025