2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பத்தமேனியில் வீட்டு சொத்துக்குச் சேதம்: பிரதான சந்தேகநபர் கைது

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

பத்தமேனி பகுதியிலுள்ள வீடொன்றைச் செதப்படுத்திய குற்றச்சாட்டில், பிரதான சந்தேகநபராக இளைஞன் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன், பத்தமேனி பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த இளைஞன், பத்தமேனி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இரவு நேரம், நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் புகுந்து, வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பவற்றை சேதப்படுத்தியதுடன், வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பிரதான சந்தேக நபரான குறித்த இளைஞன், நேற்று (06) கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை, இன்று (07) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை ஜனவரி 22ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--