Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 24 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸார் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஓகஸ்ட் 4ஆம் திகதிவரை, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
அனுமதியற்ற முறையில் மணல் ஏற்றிச் சென்ற போது, பொலிஸாரின் உத்தரவையும் மீறிச் சென்றனர் எனத் தெரிவித்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே, இவ்விளைஞர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .