2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

பஸ் மோதியதில் 6 வயது சிறுமி படுகாயம்

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

ஏ9 நெடுஞ்சாலையின் எழுதுமட்டுவாழ் பகுதியில், இன்று (12) இடம்பெற்ற விபத்தில், 6 வயது சிறுமி ஒருவர் படுகாயங்களுக்கியுள்ளார்.

பஸ்ஸில் இருந்து இறங்கி, வீதியைக் கடக்க முற்பட்ட னகுறித்த சிறுமியை, எதிரே வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுமி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்துடன் தொடர்புடைய இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--