Princiya Dixci / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (09) எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது 12 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, குறித்த மாணவி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
30 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
30 minute ago
37 minute ago
2 hours ago