Princiya Dixci / 2016 ஜூலை 13 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் கூறினார்.
வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
'இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் இடம்பெற்ற வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் பாரப்படுத்தியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் இரகசியமான முறையில் சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலங்களின் பிரதிகளைத் தந்துதவினால், விசாரணைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்' எனக் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதவானிடம் கோரினர்.
எனினும், அந்தக் கோரிக்கையை மறுத்த நீதவான், 'அது சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தரமுடியாது. இந்த வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் போது, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அவை பாரப்படுத்தப்படும். அதன்போது, நீங்கள் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.
4 hours ago
9 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
24 Oct 2025