Gavitha / 2016 ஜூலை 10 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்லாத 670 மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாமைக்கான காரணம் கண்டறியப்பட்டு அதற்கான மேலதிக நடவடிக்கைளை கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் மேற்கொண்டுள்ளார்.
கிராம அலுவலகர், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் ஆகியவர்கள் மூலம் இந்தத் தகவல் திரட்டப்பட்டுள்ளது. இதில், முழுமையாக பாடசாலையைக் செல்லாத 21 சிறுவர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களில் 15 சிறுவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிவானின் உத்தரவுக்கமைய சிறுவர் இல்லங்கள் மற்றும் அரச சான்றுகள் பெற்ற நன்னடத்தை பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.
முழுமையாக பாடசாலைக்குச் செல்லாமல் 67 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருப்பதாக கிளிநொச்சி கல்வி வலயத் தகவல்களில் உள்ளது.
இந்நிலையில், ஒழுங்காகப் பாடசாலை செல்லாத 670 பேர் மாவட்டச் செயலகத்தால் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஒழுங்காக பாடசாலைக்குச் செல்லாத உரிய காரணங்களை கண்டறியும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. அவற்றைக் கண்டறிந்து, அவை தீர்த்து வைக்கப்பட்டு, ஒழுங்காக பாடசாலை செல்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
வறுமை மற்றும் பெற்றோரின் அக்கறையின்மை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
41 minute ago
1 hours ago