2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பெண்ணை தாக்கியவருக்கு சிறைத்தண்டனை

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பிரான்பற்று பகுதியில் பெண் ஒருவருக்கு அடித்து காயத்தை ஏற்படுத்திய நபருக்கு 5 வருடம் ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் புதன்கிழமை (02) உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு பணித்துள்ளார்.

பிரான்பற்று பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக குறித்த நபர் பெண் ஒருவரை தாக்கியுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த  நபரை கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி இளவாலை பொலிஸார் கைது செய்து, மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இவரை குற்றவாளிகளாக இனங்கண்ட நீதவான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டதுடன், ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--