2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பார்க்க ஆவலலுடன் வரும் பொதுமக்கள்

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பொலிஸ் நெத' புகைப்படகண்காட்சியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பொதுமக்கள் சனிக்கிழமை (26) ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.

பொலிஸ் யாழ்ப்பாண பிரிவு மற்றும் குற்றப்பதிவு திணைக்கள புகைப்படக்கூடம் என்பன இணைந்து இக் கண்காட்சியை 26, 27, 28ஆம் திகதிகளில் யாழ். பொதுநூலகத்தில் நடத்துகின்றன.

இக் கண்காட்சியில் 156க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான இனங்காணப்பட்டிருந்தார்.

இத் தாக்குதல் சூத்திரதாரிக்கு பிரபாகரன் மூலம் வழங்கப்பட்ட அடையாளச்சின்னத்தில் பிரபாகரனின் கைவிரல் அடையாளம் பதியப்பட்டிருந்தது.

பின்னர் 1985ஆம் ஆண்டு இந்தியா தமிழ்நாட்டில் உமாஹேஸ்வரன் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக  தமிழ்நாட்டு பொலிஸாரால் பிரபாகரன் கைது செய்யப்பட்ட நேரத்தில் பெறப்பட்ட கைவிரல் அடையாளம் மத்திய வங்கி குண்டு வெடிப்பின் போது பெறப்பட்;ட சான்றுப்பொருள் ஒன்றுடன் தொடர்புபட்டிருந்தது.

இச் சம்பவத்தில் பிரபாகரனுக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .