2021 மே 08, சனிக்கிழமை

புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

விஜய் நடித்து நேற்று வியாழக்கிழமை (01) வெளியிடப்பட்ட புலி படத்தை மொக்கைப்படம் எனக்கூறியரை, விஜயின் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் யாழ். ராஜா திரையரங்கில் இடம்பெற்றுள்ளது.

தாவடியிலிருந்து வருகை தந்த இளைஞர் குழு, நேற்று (01) படத்தைப் பார்வையிட்ட பின்னர், அந்தக் குழுவில் இருந்த ஒருவர் 'புலி படம் மொக்கைப் படம்' எனக்கூறியுள்ளார். இதனைக் கேட்ட அக் குழுவில் இருந்த மற்றொரு இளைஞர் இவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சண்டையை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி காயப்பட்டவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

யாழில் இடம்பெறும் வன்முறை கலாசாரத்துக்கு தென்னிந்திய சினிமாவின் தாக்கமே காரணம் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X