Niroshini / 2016 மார்ச் 29 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்
சர்வோதயம் அமைப்பின் யாழ்ப்பாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், 'சமத்துவத்துக்கான உறுதி மொழி, வலுவான பெண், நிலையான நாளைய தினம்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது.
தேசோதய சபையின் யாழ். மாவட்ட தலைவர் நா.தனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் கலந்துகொண்டனர்.
இதன்போது, பெற்றோர்களை இழந்த சிறுவர்களை வளர்த்து வரும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 30 பாதுகாவலர்கள் கௌரவிக்கப்பட்டனர். யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் தலா இரண்டு பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .